உலக குருதி கொடையாளர்
தினத்தை முன்னிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியோடு இணைந்து இரத்த தான நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளும் அமைப்புக்களை கெளரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இன்று (07) வைத்தியசாலையின் கிளினிக் மண்டபத்தில் இடம் பெற்றது.
மேற்படி நிகழ்வு கல்முனைஅஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்ச்சகர் ஏ.எல்.எப்.ரகுமான் தலைமையில் இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார் அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்
இந்த வைத்தியசாலையை ஆரம்பித்ததிலிருந்து குருதியை பெற்றுக்கொள்ள சிரமப்பட்டோம் ஆனால் இன்று குருதியை பெற்றுக்கொள்ள பொது மக்கள் மற்றும் அமைப்புகள் குருதி வழங்க முன் வருகின்றனர்.
குருதி வழங்குவதனால் உடலுக்கு பாதிப்பு ஏற்ப்படுவதில்லை மாறாக அது உடலுக்கு புத்துணர்ச்சியளிக்கிறது.
ஒரு கால கட்டிடத்தில் குருதிப்பெருக்கினால் மரணங்கள் சம்பவித்தது ஆனால் இப்போது குருதிப் பெருக்கினால் மரணிப்பதுயென்பது அரிதாகும் உங்களுடைய இவ் குருதி வழங்கும் உதவியானது மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது எனவே உங்களை நாங்கள் கெளவிப்பது என்பது மிகவும் பெறுமதியானதாகும் .மேலும் இது தொடர்பாக ஏனையோருக்கும் தெளிவுட்டவேண்டும் குருதி பெருக்கினால் அல்லது குருதி தொடர்பான நோயினால் எவரும் மரணிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்க்காய் இவ்வாறான திடடங்களை மேற்க்கொள்கிறோம் .
மேலும் தொடர்ந்தும் உங்களை ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் இதற்காக வைத்திய சாலை அத்தியட்ச்சகர் என்ற வகையில் சகலருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இதன் போது குருதி வழங்குனருக்கு வைத்தியசாலையினால் பரிசுபொருளும் சான்றிதழும் வழங்கப்பட்டத்து மேலும் குருதி தொடர்பாக பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.