உழ்ஹிய்யாக் கடமையை பாதுகாப்பான முறையில் நடைமுறைப்படுத்துமாறு வேண்டுகோள்.

ஐ. ஏ. காதிர் கான்-

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஹஜ்ஜுப் பெருநாள் (உழ்ஹிய்யா) குர்பானிக் கடமையை, பாதுகாப்பான முறையில் நடைமுறைப்படுத்துமாறு, முஸ்லிம் புத்தி ஜீவிகளும், உலமாக்களும் இம்முறை உழ்ஹிய்யாக் கொடுப்போரிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
ஊரில் உள்ள ஜமாஅத்தினர், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஆடு மாடு விற்பனையாளர்கள், இறைச்சிக்கடை உரிமையாளர்கள், தனவந்தர்கள் மற்றும் ஊரின் நலன்புரி சங்கங்களின் கவனத்திற்கும் இது தொடர்பிலான அறிவுறுத்தல்களை அவர்கள் முன் வைத்துள்ளனர்.

அந்த வேண்டுகோளில் அவர்கள் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

பிற மதத்தவர்களிடமிருந்து மாடுகளைக் கொள்வனவு செய்யாமல் இருத்தல், 
 
மாற்றீடாக முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து பிராணிகளைக் கொள்வனவு செய்தல்,
முடியுமானவரை மாடுகளுக்கு பதிலாக ஆடுகளைக் கொள்வனவு செய்தல், 

முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய பிரதேசத்தில் குர்பான் கொடுத்தல்,
( உதாரணமாக, பேருவளை, காலி, வெலிகம, புத்தளம், மன்னார், கல்முனை, காத்தான்குடி, அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை). 
 
இயன்றளவு, இந்த முறை தியாகம் செய்து குர்பான் கொடுக்காமல் தவிர்த்துக் கொள்ளுதல். கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றால், மேலே குறிப்பிடப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல்,
குர்பான் ஆடு அல்லது மாடுகளின் எலும்புகள் மற்றும் தோள்களை ஒழுங்காகப் புதைத்துவிடல். இதனை சரியாக மேற்கொள்ளவில்லையென்றால், இதனால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாகவே பிரச்சினைகள் ஏற்பட இடமுண்டு.

குர்பான் இறைச்சியை மக்களுக்கு வீடு வீடாகச் சென்று பங்கிடும்போதும், அதனை பிரயாணங்களில் எடுத்துச் செல்லும் போதும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் சோதனைச் சாவடிகளைக் (check point) கடந்து செல்ல வேண்டிவரும். 

இத்தருணத்தில், மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகும் என்பதைக் கட்டாயம் கருத்தில் கொள்ளுதல்,
மாடுகளை தூரப் பிரதேசங்களிலிருந்து சட்ட ரீதியாகக் கொண்டு வந்தாலும், மிருக சித்திரவதை எனக்கூறி, மாடுகளை நீதிமன்றங்களுக்குக் கொண்டுபோய், போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படக்கூடும் . இதனால், பணமும் நேரமும் வீணாகலாம்.
அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேகரித்து வழங்கிய நிதியை விட பல மடங்கு நிதித் தொகை, சமூகத்துக்கு வெளியே செல்கின்றது.

இந்த வியாபார உலகில் வாங்கி விற்றல் என்பது, சாதாரண விடயம். ஆனால், பேரினவாதிகள் முஸ்லிம்களின் "Buying Power" இனை அறிந்ததன் விளைவாகவே, மாடுகளைக் கூடிய விலைக்கு எமக்கு விற்பனை செய்வது மட்டுமல்லாமல், மாடு அறுப்புக்கு எதிராகவும் அவர்களே செயற்படுகின்றனர்.

எனவேதான், இம்முயற்சிக்கான ஒத்துழைப்பை அனைத்து முஸ்லிம்களிடமும் வேண்டி நிற்கின்றோம். இம்முயற்சியானது யாரையும் திருப்திப் படுத்துவதற்கான முயற்சியல்ல. மாறாக, முஸ்லிம்களின் இருப்பை நிர்ணயிக்கின்ற ஒரு பாரிய முயற்சி.
முஸ்லிம்களை வேண்டுமென்றே ஒரு வம்பிற்கு இழுத்து, பிரச்சினைகளில் மாட்டிவிடும் சந்தர்ப்பம் அதிகமாகவே உள்ளது.
ஆகவே, இம்முறை தியாகம் செய்து, அடுத்த முறை இந்தக் கடமையை நிறைவேற்றினால் மிகவும் நல்லது. தியாகத்திருநாளை நாம் தியாகம் செய்து கொண்டாடுவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -