எம்.என்.எம் .அப்ராஸ், எம்.ஐ. சம்சூதீன்-
உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியோடு இணைந்து இரத்த தான நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளும் அமைப்புக்களை கெளரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இன்று (07) வைத்தியசாலையின் கிளினிக் மண்டபத்தில் இடம் பெற்றது.
மேற்படி நிகழ்வு கல்முனைஅஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்ச்சகர் ஏ.எல்.எப்.ரகுமான் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது குருதி வழங்குனருக்கு வைத்தியசாலையினால் பரிசுபொருளும் சான்றிதழும் வழங்கப்பட்டத்து
அத்துடன் குருதி தொடர்பாக பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வைத்தியர்கள் ,வைத்தியசாலையின் ஊழியர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.