தென்கிழக்குப் பல்கலைக்கழக துறைத்தலைவியானார் கலாநிதி சுஜா றாஜினி!


தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் உயிரியல் பிரிவின் துறைத்தலைவியாக கலாநிதி சுஜா றாஜினி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு ஆய்வுகூட பயிற்றுனராக (Demonstrator) தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இணைந்துகொண்ட இவர், 1999 ஆம் ஆண்டு முதல் விரிவுரையாளராக பதவியேற்று இன்றுவரை செயற்பட்டு வருகிறார்.
பெரிய கல்லாறு தளப்பத்து வீதியை பிறப்பிடமாகக்கொண்ட திருமதி சுஜா றாஜினி வரதராசன், தனது ஆரம்பக்கல்வியை மட்/விநாயகர் வித்தியாலயத்தில் ஆரம்பித்து இடைநிலைக்கல்வியை மட்/பெரிய கல்லாறு மத்திய கல்லூரியிலும் உயர் கல்வியை கமு/கார்மேல் பாத்திமா கல்லுரியிலும் பட்டப்படிப்பை கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்திருந்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விஷேடதரம் வரை கல்விகற்ற கலாநிதி சுஜா றாஜினி, தனது கலாநிதிப்பட்டத்தையும் அதே பல்கலைக்கழகத்திலேயே பூர்த்தி செய்திருந்தார்.
ஆசிரியர் தம்பிராசா வரதராசனை துணைவராக கரம்பிடித்த இவருக்கு கிர்சனா மற்றும் விதுர்சனா ஆகிய இரு குழந்தைகளும் உள்ளன.

பல்வேறு சமூக சேவை செயற்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றிவரும் இவர் பட்டிருப்பு மத்தியஸ்த்த சபைத் தவிசாளராகவும் மாதர் சங்க செயலாளராகவும் பெரியகல்லாறு சுவிஸ் ஒன்றிய தலைவியாகவும் செயற்படுவது குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -