ஆற்றில் குதித்து தாய், குழந்தையை மீட்ட சிறுவன்
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதிலும் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
இந்நிலையில், சோனிட்பூர் பகுதியில் உள்ள ஆற்றை தாய் மற்றும் 2 குழந்தைகள் கடக்க முயன்றனர். அப்போது நீரின் அளவு திடீரென அதிகரித்தது. இதனால் குழந்தைகளுடன் தாயும் ஆற்றில் விழுந்து சிக்கிக் கொண்டார்.
அப்போது அந்த வழியாக, மிசாமாரி பகுதியை சேர்ந்த11 வயது சிறுவன் உத்தம் டடி வந்து கொண்டிருந்தான். ஆற்றில் சிக்கியவர்களை கண்டதும் உடனடியாக ஆற்றுக்குள் குதித்து, வெள்ளத்தில் சிக்கிய தாய், குழந்தையை பத்திரமாக மீட்டான். ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை துணிவுடன் மீட்ட சிறுவனுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சிறுவனின் தைரியத்தை கேள்விப்பட்ட மாவட்ட நீதிபதி லக்கியா ஜோதி தாஸ், சிறுவனை பாராட்டினார். அத்துடன், வீர தீரத்துக்கான விருதுக்கு சிறுவன் உத்தம் டடியின் பெயரை பரிந்துரைத்து உள்ளேன் எனவும் தெரிவித்தார்.
#விருது#அசாம்#சிறுவன்#வெள்ளம்#காப்பாற்றிய.