இவர் போன மாதம் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டிருந்தார்.
அதில், "முஸ்லீம்களுக்கு ஒரே ஒரு முடிவு மட்டுமே உள்ளது. இந்து சகோதரர்கள் 10 பேர் கொண்ட குழுவை உருவாக்கி, முஸ்லிம் தாய்மார்கள் மற்றும் பெண்களை தெருவில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும்.
பின்னர், அவர்களை மற்றவர்கள் பார்க்கும் விதமாக தூக்கில் தொங்கவிட வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார். அதுவும் இந்தி மொழியில்தான் இந்த பதிவினை போட்டிருந்தார். இந்தியாவை பாதுகாக்க இப்படிதான் செய்ய வேண்டும் என்றும் சுனிதா தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பலதரப்பிலும் அதிர்ச்சியையும் உண்டாக்கியது.
அத்துடன் இவரது இந்த பதிவு இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு, வைரலானது. இந்நிலையில், அகமதாபாத் மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தீபால் திரிவேதி இதுதொடர்பாக பதிவிட்ட ட்வீட்டுக்கு பாஜக சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சுனிதாவை பாஜக பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவர் விஜயா ரஹாத்கர், "பாஜக மகளிர் அணி, இது போன்ற வெறுப்பு கருத்துக்களை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அந்தப்பெண் நீங்கள் ட்வீட் செய்யப்படும் முன்பே கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்" என்று கூறியுள்ளார்.