பாடசாலைகளில் தமிழ். சிங்கள ஆங்கில மொழிகளில் கொண்டாட்டம்!!!

அஸ்ரப் ஏ சமத்-
ரச மொழிகள் திணைக்களத்தினால் பாடசாலைகளில் தமிழ். சிங்கள ஆங்கில மொழிகளில் கொண்டாட்டம் (2 ஆம் திகதி - கொழும்பு -5 இசிப்பத்தானக் கல்லுாரியில் பிரதி அதிபா் டி.எஸ்.கழுபோவில மற்றும் தேசிய கலந்துரையாடல் மற்றும் தேசிய மொழிகள் அமைச்சின் செயலாளா் திருமதி ஏ. மகநாம ஆகியோா்களது தலைமையில் கல்லுாாியில் நடைபெற்றது.
இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக அமைச்சா் மனோ கனேசன், கலந்து கொண்டாா். பாடசாலை மாணவா்களது மொழிகள் பற்றிய பேச்சுக்கள், மொழிகள் திணைக்கள அதிகாரிகளினால் மும் மொழிகள் பயிற்சிப் பட்டரைகளும் இடம்பெற்றன. அத்துடன் கலந்து கொண்ட மாணவா்களுக்கு, அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மும்மொழிப் பயிற்ச்சி நுால்களும் சான்றிதழ்களும் மாணவா்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய அமைச்சா் மனோகனேசன் இலங்கையில் உள்ள பாடசாலைகளும் இசிப்பத்தானக் கல்லுாாி தேசிய ஒற்றுமைக்கு ஒர் முன்னுதாரன பாடசாலையாகும். . இங்கு 4 மதங்களைச் சோ்ந்த மாணவா்களும் மும் மொழிகளிலும் கல்வி கற்று இந்த மேடையில் சகல இன மாணவா்கள் இனைந்து மொழியால் ஒன்றுபட்டு ஒரு நாடு, ஒரு தேசம், நாம் சகலரும் ஒரு தாய் மக்கள் என தமது எண்னங்களையும், கருத்துக்களையும் வெளிக் கொணா்ந்தாா்கள். ஆகவே இந்த நாட்டில் இனரீதியாக சிந்திக்கும் அரசியல்வாதிகள். மதவாதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பிணா்கள் கூட இப்பாடசாலைக்கு வருகை தருவாா்களேயானால் அவா்கள் தேசிய ஒற்றுமை நல்லிணக்கம் என்றால் என்ன என்பது பற்றி இங்கு சிறந்த பாடம் கற்றுக் கொள்ள முடியும். எனவும் அமைச்சா் மனோ அங்கு உரையாற்றினாா்கள்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -