கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு நிரந்தர கணக்காளர் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை என உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு வணசிங்க என்ற நிரந்தர கணக்காளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை(9) பதவியேற்றதாக வெளிவந்துள்ள செய்திக்கு மறுத்த பின் மேற்கண்டவாறு கூறினார்.
குறித்த நிரந்தர கணக்காளர் எமது கல்முனை வடக்கு உப பிரதேச செயலக காலை வந்துள்ள போதிலும் அவர் பதவியேற்புக்காக வரவில்லை என்பதுடன் பார்வையாளராக வந்து சென்றதாக அவர் மேலும் கூறினார்.
அரசாங்கத்திற்கெதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவரப்பட்ட உள்ள நிலையில் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா மதியாபரணம் சுமந்திரன் ஆகியோர் நிரந்தர கணக்காளர் ஒருவரையாவது நியமிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதற்கு இணங்கி இருந்த பிரதமர் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக வாக்குறுதி வழங்கி இருந்தார்.
இருந்த போதிலும் இன்று நிரந்தர கணக்காளர் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இருந்து கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் மீண்டும் அவர் பதவியை ஏற்காது திரும்பி சென்றிருப்பதாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.