தொகுதி அமைப்பாளர்கள் இன்னொரு தொகுதிக்கு சென்று அபிவிருத்தி செய்வதையோ,மக்களின் பிரச்சினைகளை கேட்டரிவதில் தடையாக இருக்கின்றார்கள்

எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் தொகுதி அமைப்பாளர்கள் இன்னொரு தொகுதிக்கு சென்று அபிவிருத்தி செய்வதையோ,மக்களின் பிரச்சினைகளை கேட்டரிவதில் தடையாக இருக்கின்றார்கள் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
கந்தளாயில் இன்று(7) ஐக்கிய தேசியக்கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் இம்மாவட்டத்தில் கந்தளாய் பிரதேசத்தில் ஏராளமான வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கின்றோம் இன்னும் கட்டிக் கொண்டிருக்கின்றோம்,இப் பகுதியில் இறுதியாக வழங்கிய வீட்டுத் திட்டத்தினை அனாவசியமான கடிதங்கள் மூலம் தடுத்து நிறுத்தியிருக்கின்றார்கள் எவ்வாரென்றால் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்காமல் வேறு நபர்களுக்கும், கட்சியை சார்ந்தவர்களுக்கும் கிடைத்துள்ளதாக தெரிவித்து கடிதங்கள் அனுப்பியுள்ளதால் தற்போது நிறுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன விசாரணைகள் முடிந்ததன் பின்பு உங்களுக்கான காசோலைகள் கிடைக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
திருகோணமலை மாவட்டத்தில் மூன்று தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன அதில் தற்போது நான் மூதூர் தொகுதிக்கு அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். அதேபோன்று திருகோணமலை தொகுதியில் யாரும் அமைப்பாளர் நியமிக்கப்படாத காரணத்தினால் அதையும் நான் கவனித்து வருகின்றேன்.சேருவில தொகுதிக்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர்கள் அவர்களுடைய தொகுதியை கவனித்து வருகின்றார்கள் ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் அனைத்து தொகுதிகளிலும் பரவலாக வாழ்கின்றார்கள் நான் அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும் ஆனால் சிலர் அதை விரும்புவதில்லை அவ்வாறு செய்கின்ற சேவைகளை புறக்கணிக்கின்றார்கள்.
ஐக்கியத் தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்திலே வீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன நடாளாவிய ரீதியில் பல வீட்டுத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன இன்று கந்தளாய் பகுதியில் அரச அல்லது தனியார் காணிகளை பெற்றுக்கொள்வதென்பது ஒரு கடினமான செயற்படாக அமைந்து காணப்படுகின்றது. இப்பகுதியில் அவ்வாறு காணிகள் வழங்குகின்ற போது நான் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார்.
இந்நிகழ்வில் கந்தளாய் மற்றும் தம்பலாகாமம் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சிஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -