ஐ.தே.கட்சியின் செய்றபாடுகளில் தலையிடுவதற்கு சந்திரிகாவுக்கு இடமளிக்க முடியாது-ரவி

க்கிய தேசியக் கட்சியின் செய்றபாடுகளில் தலையிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்வுக்கோ அல்லது வேறு எவருக்குமோ இடமளிக்க போவதில்லை என்று அந்த கட்சியின் உப தலைவரும் மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு தற்போது வெளியாட்களின் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. எங்களின் கட்சிக்குள் இருக்கும் இணக்கப்பாட்டையும் ஒற்றுமையையும் சீர்க்குழைக்கும் வகையிலும் சிலர் செயற்படுகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க போன்றோர் எங்களின் கட்சியை வழிநடத்த முயற்சிக்கிறார்கள். எங்களது கட்சியின் அடையாளத்தையும் ஒற்றுமையையும் இல்லாமல் செய்ய சந்திரிக்கா குமாரதுங்கவுக்கோ அல்லது வேறு எவருக்குமோ இடமளிக்க போவதில்லை.

அத்துடன் எங்களின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகியன ஒன்றிணைந்தே தீர்மானிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.வீகே

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -