கடந்த பாராளுமன்ற தேர்தலில் கல்குடா தொகுதியினை பிரதி நிதித்துவப்படுத்தி கல்குடாவின் அரசியல் தலைமையான அமீர் அலியை எதிர்த்து முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக புதுமுக வேட்பாளராக களமிறங்கிய மொஹம்மட் ரியால் தேர்தலில் தான் அடைந்த தோல்விக்கு பின்னர் கட்சியின் தலைமையின் விசுவாசி என்ற முக்கிய காரணத்தின் அடிப்படையில் அவருக்கு முஸ்லிம் காங்கிரசினுடைய கல்குடாவிற்கான அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது.
குறித்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடு முக்கிய தேர்தலாக கணிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அமைப்பாளர் ரியாலின் வழி காட்டலில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் சுயற்ச்சையாக களமிறக்கப்பட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரசினை விடவும் அதிகமான ஆசனங்களை பெற்ரிருந்தும், வரலாற்றில் என்றும் ஓட்டமாவடி பிரதேச சபையினை கைப்பற்றிராத முஸ்லிம் காங்கிரசிற்கு குறித்த சபையினை கைப்பற்றும் வாய்ப்பிருந்தும் கூட ரியாலினுடைய அரசியல் அனுபவமின்மை, உறுப்பினர்களை சமயோசிதமாக கையாள தெரியாத நெறிமுறைகள், சரியான திட்டமிடல் இன்மை, தான் விரும்பியவரே தவிசாளராக வர வேண்டும் என்ற காரணத்தினால் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவின்மை, போன்ற பல பிழைகளை விட்டதினால் பிரதேச சபையினை ஆட்சி முஸ்லிம் காங்கிரசிடமிருந்து கை நழுவிப்போனது.
குறித்த சம்பவத்தினால் கல்குடாவில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு மத்தியில் எதிர்ப்பினையும், தொடர்ந்தேர்ச்சியான விமர்சனங்களையும் சந்தித்து வந்த ரியால் பிரதேசத்து முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள், சிரேஸ்ட்ட போராளிகளினால் அமைப்பாளர் பதவிலிருந்து ரியாலை நீக்கி புதிய அமைப்பளரை நியமிக்குமாறு கட்சியின் தலைமை அப்துர் ரவூப் ஹிபத்துல் ஹக்கீமிற்க்கு அழுத்தங்களும், வேண்டுகோள்களும் நாளுக்கு நாள் கல்குடாவிலிருந்து அதிகரித்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில் கடந்த வருடம் இறுதி பகுதியில் திடீரென அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்த ரியால் மீண்டும் கட்சியின் தலைமையின் வேண்டு கோளுக்கிணங்க அமைப்பாளர் பதவியை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்ததை அறிய கூடியதாக இருந்த சம்பவங்கள் எல்லோரும் அறிந்த விடயமாகும். இருந்தும்….நாளுக்கு நாள் கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு மத்திலுயிலும், அதிலும் முக்கியமாக கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட கட்சி சார்ந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மத்தியிலும் ரியால் மீதான எதிர்ப்புக்கள் அதிகரித்து வந்த நிலைமையே காணப்பட்டது.
இவ்வாறு கல்குடாவின் முஸ்லிம் காங்கிரசினுடைய நிலைமை இருக்கதக்க தற்பொழுது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நசீருடைய பிரத்தியேக செயலாளராக இருந்த அன்வர் நெளசாட் ஆசிரியர் கல்குடாத் தொகுதியின் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இணைப்பாளர் எனும்பதவியில் அமர்த்தப்பட்டு கட்சியினுடைய சகல முன்னெடுப்புக்களையும் அவரே செய்து வரக்கூடிய நிகழ்வுகளை அவதானிக்க முடிகின்றது.
அத்தோடு வருகின்ற மாகாண சபை தேர்தலிலும் அவரே கல்குடா தொகுதியில் களமிரக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளோடு அதற்கான அதிக வாய்ப்புக்கள் அவருக்கே இருப்பதாக கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஸ்ட்ட செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் தலைமைக்கு அழுத்தங்களை கொடுத்து வருவதாக பிரதேச மக்களினுடைய அலசல்களில் இருந்து தீர்க்கமாக உணரக்கூடியதாகவும் இருக்கின்றது.
அதற்கு மேலும் வலுச்சேர்கும் முகமாக பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசினை பிரதி நிதித்துவப்படுத்தும் அனேகாமன உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அன்வர் நெளசாட்டுடன் இணைந்தே தங்களது அரசியல் முன்னெடுப்புக்களையும், அபிவிருத்திகளையும் வருகின்ற தேர்தலை மையப்படுத்தி செயற்படுகின்றமை நெளசாட்டே அடுத்த வேட்பாளர் என்பதனை மேலும் உண்மைப்படுத்தும் விடயமாகவும் உள்ளது.
ஆகவே இவ்வாறான விடயங்களை அவதானிக்கின்ற பொழுது தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமான கல்குடா அமைப்பளர் தன்னை அடையாள படுத்திக்கொண்ட ரியால் கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் வட்டத்தினால் ஓரங்கட்டப்பட்டு விட்டாரா.? அல்லது அவரே இனி நமக்கு கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்துக்கு மத்திப்பும் ஆதரவும் இல்லை என்பதனை உணர்ந்து தானே ஒதுங்கிக்கொண்டாரா.? அல்லது கட்சியினுடைய முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணக்கவும், கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்களின் தொடர்சியான அழுத்தக்கள் காரணமாகவும் கட்சியின் தலைமை அப்துர் ரவூப் ஹிபத்துல் ஹக்கீம் கல்குடாவிற்கான முஸ்லிம் காங்கிரசினுடைய செயற்பாட்டுக்கான முழு பொறுப்பினையும் அன்வர் நெளசாட்டிடம் ஒப்படைதுள்ளாரா.? என்பது முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு மத்தியில் மட்டும் அலசப்படும் விடயம் என்பதற்கு அப்பால் கல்குடா பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இடையில் பல அரசியல் எதிர்பார்ப்புக்களோடு அலசப்படும் விடயமாக கல்குடாவில் மாறியுள்ளது.