அரசாங்கத்தின் அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டினால் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை ஆசிரியர் விடுதி கட்டடத் திறப்பு விழா இன்று(8)திங்கள்கிழமை கல்லூரியின் அதிபர் ஏ.பீ முஜின் தலைமையில் எம்.எஸ் காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதிகளாக கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ் அப்துல் ஜலீல், விசேட அதிதியாக பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.எல்.ஏ றகீம், பீ.ஜிஹானா ஆரீப்,சாய்ந்தமருது கோட்டக் கல்வி பணிப்பாளர் ஏ.எப் நஸ்மியா சனூஸ்,பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் எம்.ஐ.எம் முஸ்தாக்,அபிவிருத்தி குழு உறுப்பினர் தேசமாணிய அல்ஹாஜ் ஏ.பீ ஜெளபர் இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர் நெளபர் ஏ பாவா,கே.எம் தெளபீக்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,ஆசிரியர்கள்,நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.