கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை கிழக்குமாகாண சாம்பியனாக தெரிவு.


எ.எம்.றொஸான்-

ல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடைப்பட்ட செஸ் சுற்றுப்போட்டியில் 17 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகள் இரண்டிலும் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

இப்போட்டியானது 26.06.2019 ஆரம்பித்து இரன்டு நாட்கள் போட்டிகளாக திருகோனமலை சென் மேரி தேசியபாடசாலையில் இடம்பெற்றது.

இம்மாணவர்களை இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பளைய மாணவனுமான எ.எம்.ஸாக்கீர் பயிற்றுவித்ததுடன்; கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் விளையாட்டு பாட ஆசிரியர்களான எ.எம்.அப்ராச் ரிலா, ஆசிரியர் அலியார் பைசர், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கலான எம்.ஏ.எம்.றிஜால், எஸ்.எல்.எம்.சுஹீதான் ஆகியோர் வழிநடத்தியனர்.

கல்லூரியின் அதிபர் எ.வி.முஜீன் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் இம்மாணவர்களை வெற்றிபாதைக்கு கொண்டுசென்ற ஆசிரியர்களுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்த வெற்றியானது கல்முனை ஸாஹிறா தேசியப்பாடசாலை வரலாற்றில் மிக முக்கியதுவம்வாய்ந்ததாக கருதப்படுவதுடன் செஸ் சுற்றுப்போட்டி தொடர்களில் 17 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகள் இரண்டிலும் முதல் தடவையாக வெற்றிபெற்று சம்பியனாக தெறிவு செய்யப்பட்டதுடன் தேசியமட்டபோட்டியிலும் பங்குகொள்ளும் வாய்ப்பினையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -