பைஷல் இஸ்மாயில்-
கடந்த ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையிலும், இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் எனும் தொனிப்பொருளில், இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் மாபெரும் இசை நிகழ்ச்சி அம்பாறை 24ம் விஜயபாகு படைப்பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகேவின் ஒழுங்கமைப்பின் கீழ் அம்பாறை வீரசிங்க விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் கிழக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர உள்ளிட்ட முக்கிய இராணுவ அதிகாரிகளின் பங்களிப்புக்களுடன் கல்முனை, பொத்துவில், அம்பாறை, உகனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களின் வர்த்தக பிரதிநிதிகளின் பங்களிப்புடனும், கிழக்கு மற்றும் அம்பாறை பிராந்திய முப்படை அதிகாரிகள் பொலிஸ் பிரதானிகள் என பலர் பங்குபற்றியதுடன் இப்பகுதியின் மூவின மக்களும் பங்குபற்றியிருந்தனர்.
இதேவேளை இந்த இசை நிகழ்ச்சியானது நாட்டின் சுமூக நிலையை உறுதிப்படுத்துவதாகவும் குறிப்பாக அம்பாறை பிராந்திய பிரதேச மக்களிடையே பாதுகாப்பு உறுதிப்படுத்துவதாகவும் அமைந்ததோடு படையினரின் துரித செயற்பாட்டிற்கு கிடைத்த வெற்றியாகவும் கருதப்படுவதாக பொது மக்கள் கருத்து வெளியிட்டனர்.