சுபஹ் தொழுகையினை நிறைவேற்ற நின்றவர் மாரடைப்பால் மரணமான சம்பவமொன்று சனிக்கிழமை (20) மீராவோடையில் இடம்பெற்றது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை 4ம் வட்டாரம் ஆலிம் வீதியைச் சேர்ந்த அலியார் யூசுப் (வயது 58) என்பவர் மீராவோடை எல்லை வீதியில் அமைந்துள்ள நூர் பள்ளிவாசலில் முஅத்தினாராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற தினம் சுபஹ் தொழுகைக்காக அதான் கூறிவிட்டு தொழுகையினை நிறைவேற்றும் போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
மாரடைப்பு ஏற்பட்ட குறித்த நபரை சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது கொண்டு சென்ற சில நிமிடங்களில் அவர் மரணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வைத்திய பரிசோதனையின் பின்னர் ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஓட்டமாவடி, மாஞ்சோலை ஹிழ்ரியா ஜும்ஆப் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.