ஹஸ்பர் ஏ ஹலீம்-
தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர் தாலிப் அலி ஹாஜியார் மற்றும் தம்பலகாமம் சுதந்திர விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய "ஹாஜியார் கிண்ணம்-2019" க்கான மென்பந்து இறுதிச் சுற்றுப் போட்டியின் சம்பியன் பட்டத்தை முள்ளிப் பொத்தானை புஹாரி விளையாட்டுக் கழகம் தனதாக்கிக் கொண்டது.
தம்பலகாமம் மீரா நகர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (16) இறுதிப் போட்டி இடம் பெற்றது.
மொத்தமாக 20 அணிகள் பங்கு பற்றியதுடன் அணிக்கு ஏழு பேர் கொண்ட மென்பந்து சுற்றுப் போட்டியில் இறுதியாக மீரா நகர் சுதந்திர விளையாட்டுக் கழகமும், முள்ளிப் பொத்தானை புஹாரி விளையாட்டுக் கழகமும் இறுதி சுற்றுக்கு தெரிவாகின.
நாளைய சுழற்சியில் வெற்றியீட்டிய இரு அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடின இதில் சுதந்திர விளையாட்டுக் கழகம் மொத்தமாக 51 ஓட்டங்களையும், புஹாரி விளையாட்டுக் கழகம் 53 ஓட்டங்களையும் பெற்று இரு ஓட்டங்களால் புஹாரி விளையாட்டு கழகம் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டது.
சிறந்த துடுப்பாட்டத்துக்கான வீரராக புஹாரி விளையாட்டுக் கழகத்தின் வீரர் சமீர் அலி தெரிவு செய்யப்பட்டார்.
சம்பியன் பட்டத்தை சுவீகரித்த அணிக்கு 30000 ஆயிரம் ரூபா பணப்பரிசும் கிண்ணமும், இரண்டாவது இடத்தை பெற்ற அணிக்கு 150000 ரூபா பணப்பரிசும் கிண்ணமும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு பணப்பரிசில்களையும் கேடயங்களையும் வழங்கி வைத்தார்.
மேலும் இதில் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி ஹாஜியார், ஆர்.எம்.றஜீன், கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.