ஜனாதிபதி மைத்திரிபாலவை சஜித் பிரேமதாசா நியாயப்படுத்திவது ஐ.தே.கட்சியைஅவமதிக்கும் செயல்-பொன்சேகா

மைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியாயப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை அவமதிப்பதாகவும், ஜனநாயகத்தை மீறிய ஜனாதிபதியை ஜனநாயக தலைவர் என கூறுகின்றார் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியில் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே எமது தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற நிலைப்பாடு எட்டப்பட வேண்டும்.

தாம் நினைத்த நேரங்களில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பேசி எந்த அர்த்தமும் இல்லை. ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட முன்னர் பொதுத் தேர்தலுக்கு சென்றால் என்ன செய்வது. இன்று ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் போதுத்துத் தேர்தலை நடத்தி உறுதியான அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற கருத்தினை பல கட்சிகள் கூறி வருகின்றனர்.

ஆகவே முதலில் பொதுத் தேர்தலை நடத்தி உறுதியாக அரசாங்கத்தை அமைத்துக்கொண்டு அடுத்த கட்ட தேர்தலுக்கு செல்வதே நல்லதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.vk
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -