மட்டக்களப்பு- வேப்பவெட்டுவான் பிரதேசத்தில் பொதுமக்கள் 01.07.2019 கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலுப்படிச்சேனை - வேப்பவெட்டுவான் வீதியில் மணல் ஏற்றும் கனரக வாகனங்கள் பயணிப்பதனால் அந்த வீதி சேதமடைவதாகத் தெரிவித்து இக்கவனயீர்ப்புப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாவடிஓடை மற்றும் காரைக்காடு போன்ற பிரதேசங்களில் மணல் ஏற்றுவதற்காக தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் இவ்வீதியால் பயணிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த புனரமைப்புச் செய்யப்படும்வரை கனரக வாகனங்கள் பயணிப்பது தடைசெய்யப்படவேண்டும் என்பது இம்மக்களின் கோரிக்கையாகும்.
சேதமடைந்த நிலையிலுள்ள இவ்வீதியில் கனரக வாகனங்கள் வேகமாகப்பயணிக்கும்போது வெளியாகும் புழுதியினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.