ஹட்டன் கண்டி பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் கடும் காயமடைந்த இருவர் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதி.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

நாவலபிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கண்டி பிரதான வீதியில் நாவலபிட்டி கினிதேனைக்கிடையில் பலந்தோட்டை பகுதியில் நேற்று (04) மாலை சுமார் 6.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் கடும் காயங்களுக்கு உள்ள இரண்டு ஆண்கள் நாவலபிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாவலபிட்டி பகுதியிலிருந்து பலந்தோட்டை நோக்கி வந்துகொண்டிருந்த இரண்டு மோட்டர் சைக்கில்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கில் செலுத்தி வந்த இருவருமே கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

குறித்த விபத்து பிரதான வீpதியில் வந்துகொண்டிருந்து மோட்டார் சைக்கில் ஒன்று தெபுகொல்ல என்ற குறுக்கு வீதிக்கு திருப்பும் போதே பின்னால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கில் மோதுண்டதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து பிரதேச வாசிகள் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் நாவலபிட்டி பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர் எனும் 30 நிதிடங்களுக்கு மேல் ஆகியும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும் இதனால் ஒரு சில மணித்தியாலங்கள் அவ்விடத்தில் ஒரு வழி போக்குவரத்தே இடம்பெற்றதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -