திருகோணமலை கந்தளாய் பகுதியில் சிறுமியை அழைத்துச் சென்ற நபயொருவருக்கு ஒரு வருடம் சிறைதண்டனை விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று(3) உத்தரவிட்டார்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்றதாக தெரிவித்து பெற்றோர்களினால் தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கெதிராக தொடரப்பட்ட வழக்கில் போதே குற்றவாளியாக இனங்கண்டு ஒரு வருடம் சிறைதண்டனை விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.