ராகுல் காந்தி ராஜினாமா....


பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள். ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே நான் கொடுத்து விட்டதால் நான் தலைவராக இல்லை. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு காங்கிரஸ் தலைவர் தேர்ந்து எடுக்கப்படவேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்தார்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மோதிலால் வோரா (90), அக்கட்சியின் இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தகவல் வெளியானது.

ஆனால், காங்கிரசின் இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, தனக்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக நான் இல்லை எனக்கூறிய ராகுல் காந்தி, தனது டுவிட்டர் வலைதளத்தில் இருந்து ’காங்கிரஸ் தலைவர்’ என்ற பதிவை நீக்கியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -