முஸ்லிம் தனியார் சட்டத்தில் நான் எந்தக் குறை காணவில்லை..தெரண தொலைக்காட்சியில் சுமந்திரன் எம்பி

பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி குறித்த ஒரு சமூகத்தின் விஷேட தனியார் சட்டங்களை நீக்க முடியாது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருமணத்திற்கான ஆகக்குறைந்த வயது விடயத்தைத் தவிர வேறு விடயங்களில் நான் குறை காணவில்லை. திருமண வயது குறித்த திருத்தமும்கூட முஸ்லிம்களின் முழுமையான இணக்கப்பாட்டின் அடிப்படையில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

இந்த நாட்டிலே கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முக்குவர் சட்டம் என்றெல்லாம் தனியார் சட்டங்கள் உள்ளன. ஆனால் எல்லோரும் முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி மட்டுமே விமர்சிக்கின்றனர். அதை ஏற்றுக்கொள்ள முடியாது..."

தெரண தொலைக்காட்சி 360 நிகழ்வில் கலந்து கொண்டு  தில்காவின் கேள்விகளுக்கு  பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தவிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சட்ட முதுமானி சுமந்திரன் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -