மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலகவுள்ளேன் என்பதில் எவ்வித உண்மையுமில்லை- அனுசா சந்திரசேகரன்

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

லையக மக்கள் முன்னணியிலிருந்து நான் விலகப்போவதாகவும்,தனி கட்சி அமைக்கப்போவதாகவும்,அல்லது வேறு ஒரு கட்சியில் இணைந்து செயப்படப்போவதாகவும், பல்வேறு செய்திகள் சமூக வளைத்தளங்களில் வெளியாகின.ஆனால் நான் ஒரு போதும் மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலகவோ அல்லது பதியகட்சி ஒன்றை உருவாக்கவோ,அல்லது வேறு கட்சியில் இணைந்து செயப்படவோ, போவதில்லை. என மலையக மக்கள் முன்னணியின் பிரதிச்செயலாளரும் அமரர் பெ.சந்திரசேகரனின் புதல்வியுமான அனுசா சந்திரசேகரன் தெரிவித்தார்.
தலைவாக்கலை ஒளி ரூட் மற்றும் ஸ்டேலின் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு எரிவாயு.மெட்ரஸ்,உட்பட சமையலறை பாத்திரங்கள் ஆகிய வழங்கும் நிகழ்வு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வி.ராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஒளிரூட் என்பது எனது தந்தையின் ஆதரவாளர்கள் பலர் நெருக்கமாக இருந்த தோட்டம்.நான் உங்களிடம் கூற விரும்புவது மலையக மக்கள் முன்னணி உணர்வுகளாலும் உணர்ச்சிகளால்,கொள்கைகளாலும் எனது தந்தையாலும் உங்களாலும் தோற்றுவித்த கட்சியாகும்.ஆகவே இதனை விட்டு வெளியில் செல்லவோ அல்லது மலையக மக்கள் முன்னணியிலிருந்து என்னை பிரிக்க எவராலும் முடியாது.அதற்கு நான் ஒரு இடமளிக்க மாட்டேன்.என்றும் மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து இந்த அமைப்பை பலப்படுத்த பயனிப்போம்.எந்த பிரச்சினையாலும் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதுடன் எனது தந்தை முன்னெடுத்த சகல அபிவிருத்தி மற்றும் ஏனைய பணிகளையும் முன்னெடுக்க தயாராக உள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -