ஜப்பான் – இலங்கை நட்புறவு அமைப்பினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரூபா 151 மில்லியன்கள் பெறுமதியான இரு தீயணைப்பு வாகனங்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (01) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
பதில்கடமை புரியும் அமைச்சர் புத்திக்க பத்திரனவின் தலையீட்டில் இந்த தீயணைப்பு வாகனங்கள் இலங்கைக்கு அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றிருப்பதுடன், ஜப்பான் – இலங்கை நட்புறவு மன்றத்தை சேர்ந்த திருமதி. எரங்கா திலகரத்ன உரிய ஆவணங்களை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.
இந்த தீயணைப்பு வாகனங்களை இலங்கை வான் படையினரின் பாவனைக்காக விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸிடம் ஜனாதிபதி அவர்கள் கையளித்தார்.
பதில் கடமை அமைச்சர் புத்திக்க பத்திரனவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.