கல்வி அமைச்சினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் "அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" வேலைத் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தோப்பூர் அல் பலாஹ் வித்தியாலயத்திற்கான ஆசிரியர் விடுதி திறந்து வைக்கப்பட்டது.
குறித்த விடுதியானது இன்று (04) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாவனைக்கு விடப்பட்டது.
குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர்ஏ.மஹ்சப், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.ஏ.காசீம் , மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான ஜெஸீலா, றிபாஸ், வெருகல் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீகாந்த் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.