எம்.பஹ்த் ஜுனைட்-
காத்தான்குடி மீடியா போரத்தில் அங்கம் வகிக்கும் ஊடகவியலாளர்கள் குழுவினர் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சபை நிர்வாகிகளை புதன்கிழமை (03) ஜம் இய்யதுல் உலமா சபை ஒன்று கூடல் மண்டபத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினர்.
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னரான ஜம் இய்யாவின் செயற்பாடுகள் பற்றியும் சமாதானம், நல்லிணக்கம் தொடர்பில் ஜம் இய்யாவின் செயற்பாடுகளின் முக்கியத்துவம் மற்றும் பொறுப்புக்கள் , பிரதேசத்தின் கலாச்சார திருத்தங்கள் போன்றவை தொடர்பில் திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது..
மேற்படி கலந்துரையாடலில் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் ஊடகவியலாளர் எஸ்.எம்.சஜீ தலைமையிலான ஊடகவியலாளர்கள் குழுவினர் மற்றும் காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.ஹாறூன்(றஷாதி), செயலாளர் அஷ்ஷெய்க் ரீ.எம்.எம்.அன்சார் (நளீமி) உள்ளிட்ட ஜம் இய்யாவின் உலமாக்களும் கலந்துகொண்டனர்.