குருணாகல் வைத்தியசாலையின் நான்கு மருத்துவர்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில் மருத்துவர் சாபீ கைது செய்யப்பட்டதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
எனினும், குருணாகல் பொலிஸாரின் இந்த தகவல்களும் பொய்யானவை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
நான்காயிரம் சிங்கள பௌத்த பெண்களுக்கு குருணாகல் மருத்துவர் ஒருவர் கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தி திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது, அன்றைய தினம் மாலை பேராசிரியர் சன்ன ஜயசுமன மருத்துவர் சாபீ பற்றி முகநூல் பதிவொன்றை இட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து டொக்டர் சாபீயை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கடந்த மே மாதம் 24ம் திகதி இந்த வாக்கு மூலத்தை அளித்திருந்ததாக பொலிஸாரிடம் நான்கு மருத்துவர்களும் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் தெரிவித்திருந்தனர்.
எனினும் நீண்ட விசாரணைகளின் பின்னர் நான்கு மருத்துவர்களும் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர்.
மருத்துவர் சாபீ கைதாகி இரண்டு தினங்களின் பின்னர் குறித்த நான்கு மருத்துவர்களும் வாக்குலம் அளித்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதன்படி, மருத்துவர் சாபீ எவ்வித முறைப்பாடுகளும் இன்றி குருணாகல் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் தேவைக்கு அமைய கைது செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
இந்த கைது தொடர்பில் போலியான தகவல்களையே பொலிஸார் வழங்கியுள்ளதாக உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.நன்றி செய்தி...