பொது பல சேனாவின் ஞானசார தேரர் எதிர்வரும் ஏழாம் திகதி இந்நாட்டை சீர்குழைப்பதற்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார்.-மஹ்ரூப்MP


எப்.முபாரக்-
பொது பல சேனாவின் ஞானசார தேரர் எதிர்வரும் ஏழாம் திகதி இந்நாட்டை சீர்குழைப்பதற்கும் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார் இதனை தடுக்கா விட்டால் இத் தனி மனிதன் நாட்டையும் சட்டத்தையும் கையிலெடுக்க சந்தர்ப்பமாக அமையும்
என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.
கந்தளாயில் இன்று(30) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

எமது அமைச்சர்களும்,இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும், கடந்த மூன்றாம் திகதி இராஜினமா செய்த போது இந்த அரசுக்கு பல நிபந்தனைகளை விதித்தோம்.
முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்ப்படுத்துவது,மத்ரஸாக்களை பாதுகாப்பது,கைது செய்யப்பட்டவர்களை விடுப்பது மற்றும் முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கு சட்ட அங்கிகாரம் வழங்க வேண்டும்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அன்று இராஜினாமா செய்யா விட்டால் இந்நாட்டில் பாரிய இனக்கலவரம் ஏற்பட்டிருக்கும்.
அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிக்கப்பட்டிருக்கின்றது .இதனால் ஞானசார தேரரின் ஊர்வலம் தடுக்கப்படல் வேண்டும் இவை தொடர்பாக ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும்,பாதுகாப்பு அமைச்சருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும்,இவ்விடயம் தொடர்பாக மகஜர் கையளிக்க உள்ளோம்.இவ்விடயத்தில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தீவிரமாக இருக்கின்றோம்.இந்நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனாவே தீர்மானிக்க வேண்டும்.
எமது முன்னால் அமைச்சர் றிஷாத் பதியுத்தீனை விமல் வீரவங்க,எஸ்.பி.திஸாநாயக்க,மகிந்தானந்த அலுத்கமக், அதுரரெலிய ரத்தின தேரர்,மற்றும் ஞான சார தேரரும் படு மோசமான வார்த்தை விரயோகங்களையும் முஸ்லிம் மக்களை இழிவு படுத்தியும் வருகின்றார்கள்.
முஸ்லிம் மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதோடு,எமது முஸ்லிம் பெண்களின் ஆடை விடயம் இன்று சட்ட ரீதியாக அணியலாம் என்றொரு நிலைக்கு வந்துள்ளது என்றார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -