பாவனையில் உள்ள பழைய NICSL (National Identity Card of Sri Lanka) பதிலாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள NICSLஐ ஒரே நாள் சேவையில் பெறும் முறை:


ங்கீகாரம் பெற்ற ஒரு ஸ்டூடியோ ஐ நாடி புகைப்படம் எடுத்து அதன் ஒன்லைன் பதிவுப் பிரதியை பெற்றுக் கொள்ளுதல். (இது ஒரு நாளின் 30 நிமிடத்தில் முடியும் வேலை)
பழைய ஆள் அடையாள அட்டை, பிறப்புப் பதிவு,புகைப்பட ஒன்லைன் பதிவுப் பத்திரம், 250 ரூபாய் பணத்துடன் தமது கிராம சேவை உத்தியோகத்தரான-GS இடம் சென்று விடயத்தை தெரிவித்தல்.(இது GSஇன் பணி நாளில் 30 நிமிடத்தில் முடித்து தரப்படும் வேலை)

GSஇனால் நிறப்பி தரப்படும் பத்திரங்களை பிரதேச செயலகத்தின் NIC பிரிவை நாடிச் சென்று சமர்ப்பித்தல். (இது பணியில் DS/ADS/CA இருந்தால் 30 நிமிடம் தொடக்கம் 60 நிமிடங்களில் முடித்து தரப்படம் வேலை)

அங்குள்ள உத்தியோகத்தர்களினால் இறுதியில் அத்தாட்சிப் படுத்தப்பட்டு தரப்படும் விண்ணப்ப படிவம் அடங்களான அனைத்து பத்திரங்களையும் எடுத்துகொண்டு கொழும்பு பத்திரமுல்லையில் அமைந்துள்ள தேசிய ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தை நாடிச் செல்லுதல். (
Department for Registrations of Persons
10th Floor
Suhurupaya
Sri Subhuthipura Road
Battaramulla.)

DRP-NIC தலைமையகத்திற்கு காலை 9 மணிக்கு சென்றால் நலவு. அனேகமானோர் அதிகாலையில் வந்து காத்திருந்து போலினில் நின்று சீக்கிரம் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதில் அவதிப்படுவதால் நேர காலத்துடன் செல்பவர்கள் காத்திருப்புக்கு என்றே பெரும் நேர காலத்தை செலவிடும் சிரமம் உண்டு.
ஆட்பதிவு திணைக்களம்,மற்றும் பாஸ்போட் அலுவலகம் இரண்டும் ஒன்றாக இணைந்து இருப்பதால் இரண்டிற்குமே செல்லும் வழி ஒன்றாகும்.
உள்ளே நுளைய முன்னர் அனைவரும் சோதனை இடப்படுகின்றனர். விண்ணப்பதாரி மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்ற நிபந்தனை கிடையாது. ஆகையால் ஆண்கள்,பெண்கள் என வேறு வேறாக சோதனை செய்யப்படும் வரிசைகளில் செல்லும் அனைவரும் நின்று சோதனையை முடித்து உள்ளே செல்ல முடியும்.
உள்ளே சென்றதும் வலது பக்கம் கெண்டின் உண்டு. இடது பக்கம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய இடம் செல்வதற்கான வழி முதலாவதாக வரும் மண்டபத்தை கடந்து சென்றதும் வலது பக்கத்தில் உண்டு.
உள்ளே சென்று இடப்பக்க மண்டபத்தை தாண்டி வலப்பக்கம் உள்ள அலுவலகம் சென்றால் வாயலின் அருகிலேயே இலக்கங்களை விநியோகம் செய்யும் இடத்தை காணலாம். எமது விண்ணப்பங்களை காட்டியதும் இலக்கம் ஒன்றை தருவார்கள்.
அந்த இலக்கம் அறிக்கப்படும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.
அந்த நேரத்தில் அறிவிக்கபப்டும் இலக்கத்தை செவிமடுத்தால் நமது இலக்க அறிவித்தல் வருவதற்கு எவ்வளவு நேரம் செல்லும் என்பதனை அனுமானிக்கலாம்.
காத்திருக்கும் நேரத்தில் அந்த அலுவலகத்தின் முன்னே உள்ள பிரதான கட்டிடத்தை நாடிச் சென்று அதன் ஏழாவது மாடி அல்லது தளத்தில் அமைந்துள்ள உணவகத்தில் சிற்றுண்டியும் டீயினையும் சுவைத்து விட்டு திரும்பி வந்திடலாம்.
வழங்கப்பட்ட அனைத்து இலக்கங்களும் 12மணிமுதல் 12.30 மணிக்கிடையில் பெற்றுக்கொள்ளப்படும் ஆகையினால் இலக்கம் கிடைத்தால் அன்றைய நாளில் சேவை கிடைக்காதோ என்ற அச்சம் தேவையற்றது.

நமது இலக்கம் அறிவிக்கப்பட்டதும் உரிய இடத்தில் உள்ள கவுண்டருக்கு சென்று விண்ணப்பத்தை சமர்பித்தால் அவர்கள் அதன் ஒவ்வொரு பக்கத்திலும் உத்தியோக பூர்வ ஸ்டாம்பை அடித்து எங்களிடமே விண்ணப்பத்தை திருப்பி அளித்து முன்னர் உள்ள பிரதான கட்டிடத்தின் 9ம் மாடிக்கு செல்லுமாறு பணிக்கின்றனர். விண்ணப்பங்களை தருகையில் சாதாரணமாக Pink கலர் அட்டையில் நமது விண்ணப்பங்களை வைத்து அளிப்பார்கள். கற்பவதிகள்,இயலாதவர்கள்,நோயாளிகள்,முதியவர்கள்,குழந்தைகள்,கைக்குழந்தைகளுடன் வந்துள்ள தம்பதிகளுக்கு yellow கலர் அட்டையில் வைத்து விண்ணப்பங்களை அளிப்பார்கள்.

முன்னே உள்ள கட்டிடத்திற்கு சென்று, லிப்ட் இருக்கும் இடத்தை அடைந்து, 9ம் தளத்திற்கு லிப்டிலே சென்றால் அங்கே உள்ள இடதுபுற அலுவலகத்திற்கு செல்லுமாறு வழியில் நிற்கும் உதவியாளர்களினால் பணிக்கப் படுவீர்கள். அல்லது நாமாகவே சென்றிடலாம்.

அங்கே சென்றதும் Pink அட்டையுடன் சென்றவர்கள் தமது இலக்கம் அழைக்கப்படும் வரை காத்திருத்தல் வேண்டும்.Yellow கலர் அட்டையுடன் வருபவர்கள் விஷேட தேவையுடையோருக்கான கவுண்டரை நாடிச் சென்று தமது விண்ணப்பத்தையும் 1000 ரூபாய் பணத்தையும் செலுத்தி பற்றுச் சீட்டை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

இனி NIC கிடைக்கும் வரை காத்திருத்தல் வேண்டும். அனேகமாக 5 மணியின் பின்னர் அனைத்து NICக்களும் வழங்கப்பட தயாராகிவிடும் ஆதலினால் காத்திருக்கும் நேரத்தில் உங்களது ஏனைய பணிகளை முடித்துவிட்டு திரும்பி வரலாம். அல்லது 7ம் தளத்திற்கு சென்று அங்குள்ள உணவகத்தில் அதி சிறப்பான சிங்கள உணவை வெறும் 100 ரூபாய்களுக்கு சுவைத்து பகல் உணவை முடித்து ஆருதலாக வந்திடலாம்.

மதியம் 2 மணியில் இருந்து பெயர் கூறி வினியோகம் செய்ய ஆரம்பிப்பார்கள்.Yellow கலர் அட்டையுடன் விண்ணப்பத்தை சமர்பித்தவர்களது NICக்கள் நேர காலத்துடன் அறிவிப்பு செய்யப்பட்டு வழங்கப்படும். Pink கலர் அட்டையுடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்தவர்களின் NICக்கள் அவர்கள் விண்ணப்பங்களை வழங்கிய நேர ஒழுங்கின் படி வரிசை கிரமமாக உரிய நபரின் முழுமையான பெயரை மூன்று மொழிகளிலும் அறிவிப்பு செய்து உரியவரை அழைத்து வழங்கப்படும்.

அனேகமாக பின்னேரம் 5 மணியின் பின்னர் அனைத்து NICக்களும் தயாராகிவிடும் ஆதலினால் மாலை 6-7 மணிக்கு முன்னதாக எங்களது NIC கிடைத்து விடுவது நிச்சயமானது.

குறிப்பு: ஆள் அடையாள அட்டையை தொலைத்தவர்கள் இதே ஓழுங்கை பின்பற்ற முன்னர் கீழ்வரும் செயற்பாடுகளை முன்னெடுத்தல் வேண்டும்.
தொலைந்த விபரத்தை கிராம சேவை உத்தியோகத்தரை விழித்து கடிதம் எழுதிச் சென்று, கிராம சேவை உத்தியோகத்தரின் அத்தாட்சியை பெற்றுக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய செல்ல வேண்டும்.

25 ரூபாய் பதிவுக் கட்டணத்தை செலுத்தி பொலிஸ் நிலையைத்தில் உரிய முறைப்பாட்டை பதிவு செய்ய, GSஇடம் அத்தாட்சிப் படுத்தி எடுத்துச் சென்ற கடிதத்தினை சமர்பிக்கலாம்.

பொலிஸ் நிலையத்தில் எமது முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட அதிகாரி ,முறைப்பாட்டு பிரதியை பெற குறித்த ஒரு தினத்தில் வருமாறு பணிப்பார்.

அத்தினதில் பொலிஸ் நிலையத்திற்கு மீண்டும் சென்று பெற்றுக்கொண்ட அந்த முறைப்பாட்டு பிரதியையும்,புகைப்பட ஒன்லைன் பதிவு பிரதியையும்,பிறப்பு பதிவு சான்றிதலையும் 500 ரூபாய் பணத்தையும் GSஇடம் சமர்பிப்பதன் மூலமாக மேலே உள்ள விடயங்களை தொடராக பெற்றுக்கொள்ளலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -