இஞ்சம் வாங்குவதை மாத்திரம் குற்றமாக இந்த சமூகம் கருதுகிறது -(கபே) பதில் பணிப்பாளர் மனாஸ் மக்கீன்(video)

பாறுக் ஷிஹான்-
ஞ்சம் வாங்குவதை மாத்திரம் குற்றமாக இந்த சமூகம் கருதுகிறது ஆனால் இலஞ்ம் கொடுப்பதும் பாரதூரமான குற்றமே என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) பதில் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சரத்துக்களை ஆய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான அமைப்பும் ( கபே) இணைந்து தேசிய மட்டத்தில் இலஞ்சம் மற்றும் மாறல் பற்றிய சரத்துக்களை ஆய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஐந்தாண்டு செயற்றிட்டம் தொடர்பாக தெளிவுட்டும் கருத்தரங்கு இன்று(6) சாய்ந்தமருது வரவேற்பு மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.
கபே அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏஸ் .எல். அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் கருத்துரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்
லஞ்சமும் ஊழலும் நாட்டில் பெருகியுள்ளதாலே அரசுக்கு செல்லவேண்டிய வரி ஒரு சில தனிநபருக்கு செல்வதால் மக்கள் மீது வரிச்சுமை ஏற்றப்படுகின்றது. பொருட்களின் விலையேற்றம் இவையனைத்தும் ஊழல் லஞ்சம் முறையற்ற விதத்தில் சொத்துச்சேர்க்க முற்படுககையில் சாதாரண பொதுமக்களே பாதிப்புறுகின்றனர்.நாட்டில் லஞ்சம் கொடுத்து முறையற்ற விதத்தில் கட்டிடம் கட்டிக்கொண்டிருக்கும்போதே இடிந்த சம்பவங்கள் நாட்டிலே நடைபெற்றிருக்கின்றன. இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதன்மூலமே நாட்டை முன்னேற்றுப்பாதைக்கு இட்டுச்செல்ல முடியும்.நாட்டில் இலஞ்சமும் ஊழலும் தொடர்ந்தும் அதிகரிக்குமானால் தேசிய வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதுடன் இலங்கை போன்ற நாடு அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே அன்று தொடக்கம் இற்றை வரை காணப்பட்டு வருகிறது .இலஞ்சம் எடுப்பதும் கொடுப்பதும் இடைத்தரகர்களாக செயற்படுவதும் பாரிய குற்றமாக கருதப்படுகிறது இலங்கை போன்ற நாட்டில் இலஞ்சம் குறைந்தபாடில்லை அதிகரித்தே வருககறது இதனால் வெளிநாடுகளில் வட்டியுடன் கடன் பெற்று நாட்டை நடாத்தக்கூடியதாகவுள்ளது நாடு பின்தங்கி அபிவிருத்தியை கண்டு கொள்ளாமல் காணப்படுகிறது.
சோமாலியா போன்ற நாடு வறுமைக்கு காரணம் அங்கு இலஞ்சம் அதிகரித்தமையும் ஒரு காரணமாகும் அரச அதிகாரிகள் மக்களுடைய வரிப்பணம் மூலமே சம்பளம் பெறுகிறார்கள் அரச திணைக்களங்களை சேர்ந்தோர்கள் மக்களிடத்தில் நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் தங்களது கடமைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் சேவைகளை முடித்துக் கொள்வதற்காக இலஞ்சம் வழங்கப்படுகிறது இதில் அரச அதிகாரிகள் இவ்வாறான செயற்பாடுகளில் கைது செய்யப்பட்டால் வாழ்க்கை தலை கீழாக மாறி சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் அரச திணைக்களங்களை சேர்ந்தோர இன்னும் சிலர் உயர் பதவிகளையுடையோர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள் .
இலஞ்ச ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டால் குறித்த நபர் மாவட்ட நீதிமன்றம் ஊடாக விசாரணைகள் இடம் பெறாது மாறாக கொழும்பில் மாத்திரமே விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
பொது மக்களாகிய நீங்கள் பயமில்லாமல் இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அறியத்தாருங்கள் அவசர இலக்கம் 1954 ஊடாகவும் எழுத்து மூலமாகவும் அரச அதிகாரிகளுக்கு எதிராக தங்களது முறைப்பாடுகளை பயமின்றி முன்வையுங்கள் எமது நாட்டில் இலஞ்ச ஊழலற்ற தேசமாக மாற்றியமைக்க அனைவரும் ஒத்துழையுங்கள் என்றார்.
இதன்போது இலஞ்சம் ஊழல் ஆணையத்தின் அதிகாரி ரீ.எம்.ரீ.சம்பத் தென்னக்கோன் அவர்கள் தெளிவுபடுத்தும்போது...

பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்தே கையூட்டை ஊக்குவிக்கும் செயற்பாட்டை சில பெற்றோர்கள் வழிவகுக்குகின்றனர்.
ஊழல் லஞ்சத்தத்தை தவிர்ப்பது தடுப்பது எவ்வாறு என்பதை சமூக மட்டத்தில் குறைத்துக்கொள்வது தொடர்பாக நாங்கள் பல இடங்களை விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றோம்.
இந்நிகழ்வில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான அமைப்பின் பதில் பணிப்பாளர் எம்.மனாஸ் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணையகத்தின் அதிகாரி டி.எம்.டி.சம்பத் கபே அமைப்பின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எஸ்.எல்.அஸீஸ் மற்றும் பொதுமக்கள் சிவில் அமைப்பினர் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இச் செயலமர்வில் இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பந்தமாக கலந்து கொண்டவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.குறிப்பாக இலஞ்சம் மற்றும் ஊழலினால் ஏற்படும் விளைவுகள் இது சமுகம் இபொருளாதார ஏனைய விடயங்களில் ஏற்ப்படும் பாதிப்புக்கள் பற்றி தெளிவுட்டப்பட்டது.மேலும் இதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் சந்தேகங்கள் கருத்துகள் பரிமாறப்பட்டன.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -