திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலக பிரிவை சேர்ந்த ஆசிரியர் எஸ்.எம்.இஸார் அவர்களால் எழுதப்பட்ட VOCABS எனும் ஆங்கில நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று (06) மூதூர் நத்வதுல் உலமா அறபிக் கல்லூரியில் இடம் பெற்றது
நூலாசிரியர் மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியில் அல் ஹாபில் மற்றும் மௌலவி பட்டம் பெற்றவர்.
ஆங்கிலத்தில் சிறந்த பெறுபேறுகள் பெற்று பேராதனை கல்வியியல் கல்லூரியில் ஆங்கிலத்தில் டிப்ளோமா பட்டம் பெற்று ஆசிரியராக கடமை புரிகின்றார்.
பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தில் BA பட்டம் பெற்று பயிற்றப்பட்ட பட்டதாரியாக தற்போது கடமைபுரிந்து வருகின்றார்.
இவரது VOCABS என்ற நூல் ஆங்கிலம் கற்கும் தரம் 6- 11 வரையான மாணவர்களுக்கும்,ஆங்கிலம் கற்க ஆர்வமுள்ளவர்களுக்கும் மிகவும் பயனுள்ள நூலாகும்.
பிரதம அதிதியாக மூதூர் வலயக் கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜே.எம்.இக்பால்,மற்றும் ஆங்கில பிரதிக் கல்விப் பணிப்பாளர்,ஆசிரிய ஆலோசகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Cont:S.M.Isar,0772395735