100 வருடம் பழைமையான ஆல மரம் முறிந்து வீழ்ந்ததில் 04 வீடுகள் சேதம்



ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

100 வருடம் பழைமையான ஆல மரம் முறிந்து வீழ்ந்ததில் 04 வீடுகள் சேதம் ஆறு குடும்பங்கள் இடம்பெயர்வு.

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன நாகவத்தை தோட்டத்தில் சுமார் 100 வருடத்திற்கு மேல் பழைமை வாய்ந்த பாரிய ஆல மரத்தின் பாரியகிளை ஒன்று நேற்று (10) இரவு முறிந்து வீழ்ந்ததன் காரணமாக நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளன.

தெய்வாதினமாக இதில் எவருக்கும் காயங்களோ உயிர் சேதமோ ஏற்படவில்லை எனினும் ஒரு சில வீடுகளில் தளபாடங்கள் சேதமடைந்துள்ளன.

குறித்த வீடுகளில் வாழ்ந்த 29 பேர் அத்தோட்டத்தில் உள்ள பாலர் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மரத்தின் மேலும் ஒரு கிளை தொழிலாளர்களின் குடியிருப்;புக்கள் பகுதியில் உள்ளதால் எவ்வேளையிலும் இந்த மரம் விழலாம் என்ற அச்சத்தில் இந்த குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இடம் பெயர்ந்தவர்களில் 13 சிறுவர்கள் 15 பெரியவர்களும் அடங்குகின்றனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு தோட்ட நிர்hகத்தினால் சமைத்த உணவு வழங்குவதஙற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சேதம் குறித்து கிராம சேவகருக்கு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் 100 வருடத்திற்கும் மேல் பழைமை வாய்ந்த தொடர் குடியிருப்பில் தான் வாழ்ந்து வருகின்றோம் அந்த குடியிருப்புக்கு சமீபமாக பாரிய ஆலமரம் உள்ளது அதுவும் 100 வருடங்களுக்கு மேல் பழைமையானது.

நேற்று இரவு வீழ்ந்தது போல் அந்த மரம் முழுவதுமாக முறிந்து வீழ்ந்தால் பாரிய அனர்த்தங்கள் ஏற்படலாம்.ஆகவே எங்களுக்கு அந்த மரத்தினை வெற்றி அகற்றும் வரை நாங்கள் இந்த இடத்தில் தான் இருப்போம் எங்களுக்கு எங்கள் பிள்ளைகளின் உயிர் முக்கியமானது என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -