டயகம சந்திரகாமம் எரோல் தோட்டத்தில் தொழிலாளர் குடியிருப்பு தாழிரக்கம்.12 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் வெளியேற்றம்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

யகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை பெருந்தோட்டத்திற்கு சொந்தமான சந்திரகாமம் தோட்டத்தில் யரவல் பிரிவில் உள்ள தோட்டத்தொழிலாளர்களின் 11 இலக்க தொடர் குடியிருப்பு ஒன்று தாழிரக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்த தொடர் குடியிருப்பில் 12 வீடுகளில் வாழ்ந்த சுமார் 55 பேர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து தொடர்ச்சியான கடும் மழை பெய்து வருகிறது இந்த மழை காரணமாக இந்த குடியிருப்பு தாழிரக்கத்திற்கு உட்பட்டு குறித்த குடியிருப்பில் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன் பல வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

ஒருசில வீடுகளில் அறைகளில் நீர் தரையிலிருந்து கசிவதனால் இந்த தொடர் குடியிருப்பு எந்நேரத்தில் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் இங்கு வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வெளியேறிவர்கள் அத்தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமறிப்பு நிலையத்திலும் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள சமையலைகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 100 வருடத்திற்கு மேல் பழைமை வாய்ந்த இந்த தொடர் குடியிருப்பு மழையுடன் சில வீடுகளில் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்களில் 12 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 55 பேர் அடங்குகின்றனர்.
இவர்களில் நான்கு கைக்குழந்தைகள்,15 சிறுவர்கள்,ஒரு உயர்தரம் கல்வி பயிலும் மாணவியும் அடங்குகின்றனர்.
குறித்த தாழிரக்கம் குறித்து நுவரெலியா கட்டட ஆராச்சி நிலையத்திற்கும் கிராம சேவகர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இது வரை கட்டட ஆராச்சி நிறுவனத்தை சேர்ந்த எவரும் வருகை தரவில்லை என இங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் ஒரு குடும்பத்தில் ஐந்து தொடக்கம் எட்டு பேர் காணப்படுகின்மையினால் சமைலறையில் மிகவும் அசௌகரியத்துடன் தங்கியிருப்பதாகவும் மழை நேரங்களில் உறங்குவதற்கு கூடி இடமின்றி விடிய விடிய விழித்திருப்பதாகவும் அதனால் தங்களுக்கு தற்காலி வீடுகளையாவது அமைத்து தருவதற்கு உரிய நடவடிக்கை சம்பந்தபட்டவர்கள் எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் மேலும் கோரிக்கை வீடுக்கின்றனர்.

இது குறித்து இவர்கள் கருத்து தெரிவிக்கையில்....

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -