மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 1250 கிலோமீட்டர் வீதிகளை நானே கொண்டு வந்தேன்- ஹிஸ்புல்லா



 அபு அஹ்னப்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் சில அரசியல்வாதிகள் எந்த சேவையையும் செய்ய முடியாமல் வெறும் பொய்யையும் என் மீது அவதூறுகளையும் சொல்லி இனவாதம் பேசிக்கொண்டிருப்போர் இன்று வீதிகளுக்கு கல் வைக்கச் செல்கின்றனர். அத்தனை வீதிகளும் நானும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களும் இணைந்து சகல ஆவனங்களும் தயார் செய்து 1250 கிலோமீட்டர் வீதியைக் கொண்டு வந்தோம் என்பதனை அவர்கள் மறைத்துவிட்டார்.

ஆனால் நான் பெயருக்காக இல்லாமல் இனம் மதம் கடந்து அனைவருக்கும் சிறந்த சேவை செய்வதனை நன்னோக்காகக் கொண்டு செயல்படுகின்றேன் என்று தனியார் வானொலி நிகழ்வில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலின் போது முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு பதில் வழங்குகையில்..

என்னால் கொண்டு வரப்பட்ட வீதிகளுக்கு கல் வைக்கச் செல்கின்றனர். ஆனால் அங்கு என் பெயரைக் குறிப்பிட்டு என்னை இனவாதியாகவும் வேறு விதமாகவும் பொய் பேசி ஏசி இனவாதம் பேசுகிறார்களே தவிர அவங்களால் எதுவும் செய்ய முடியாமலேயே உள்ளது.

அவர்களுக்கு நான் சவால் விடுகிறேன். என்னைப் பற்றி பொய்யாகவும் பித்தலாட்டங்களாகவும் பேசித்திரியும் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளான குறிப்பாக வியாழேந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் அவர்களிடம் என்னைப்பற்றிய நான் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் வாய் கிழிய மேடையில் கத்தாது முறைப்பாட்டுக்காகக் காதிருக்கும் புலநாய்வுத்துறையினரிடம் அல்லது எப் சி ஐடி போன்ற  எங்கு சரி முறையிட்டு சட்டத்துடன் நடவடிக்கை எடுக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாறாக அவர்கள் இவ்வாறு மேடை மேடையாகப் பொய்யை மாத்திரம் பேசி தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்து கொண்டு திரிகின்றனர். எனவே அவர்கள் எதனைச் சொன்னாலும் ஆதாரங்களுடன் சென்று முறையிடுமாறு மீண்டும் மீண்டும் கூறிவைக்க விரும்புகிறேன். என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -