மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஆலோசணைக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீடில் கண்டி ஹந்தான தோட்டதில் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (10-08-2019) அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், முன்னாள் கண்டி மாகாண சபை உறுப்பினர் எஸ். ராஜரட்ணம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம். உதயகுமார், அசோக ஏறத், ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டாளர் சாந்தினி கொங்காகே, தொழிலாளர் தேசிய சங்கத்தின் கண்டி அமைப்பாளர் சண்முகநாதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.