எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலை அர் ரஹ்மா குர்ஆன் கலாசாலையின் 17வது மாணவர் வெளியேற்று விழா நேற்றுமுன்தினம் மாஞ்சோலை தஃவா நிலையத்தின் வளாகத்தில் நடைபெற்றது.
கலாசாலையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எஸ்.றியாஸ் ஸஹ்வி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி, நிருவாகத் தலைவர் ஏ.ஹபீப் காஸிமி, தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.நௌபர், மீராவோடை உதுமான் வித்தியாலய அதிபர் எம்.பீ.எம்.முபாரக் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.