தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இரண்டாம் மொழி கற்பித்த ஆசிரியர்களுக்கு கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை ஆசிரியர்கள் விசனம்.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நாடாளவிய ரீதியில் சேவையாற்றும் அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு இரண்டாம் மொழியான தமிழ் மொழியினை பயிற்றுவித்து வருகின்றது.
இதற்கமைய சுகாதார துறை,பிரதேச செயலகங்கள்,இரானும், பொலிஸ்,உட்பட பல்வேறு துறைசார்ந்தவர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி வகுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறு நாடாளவிய ரீதியில் கடந்த வருடம் 2018 நவம்பர் மாதம் நடத்தப்பட்ட மொழிப்பயிற்சி வகுப்புக்களுக்காக இதுவரை அவர்களுக்குரிய கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. என ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை இந்த நிறுவனம் கடந்த காலங்களில் மாவட்ட பிரதேச மட்டத்தில் வளவாளர்களை தெரிவு செய்த போதிலும் அந்த வளவாளர்கள் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்காமல்,வெளி மாவட்டங்களிலிருந்து தங்களுக்கு நெருக்கமான வளவாளர்களை கொண்டு பயிற்சி வகுப்புக்களை நடத்துவதாகவும்.இவ்வாறு பயிற்சி வழங்குபவர்களில் பலர் தமிழ் மொழியினை இரண்டாம் மொழியாக கற்றவர்களாக இருப்பதனால் தமிழ் மொழியினை கொலை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மொழி பேசக்கூடிய அமைச்சர் ஒருவர் இதற்கு பொறுப்பாக இருந்தும் இவ்வாறு ஒரு சமூகமும் தமிழ் மொழியும் புறக்கணிக்கப்படுவது மிகவும் கவலையளிப்பதாக பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது குறித்து பல தடைவைகள் அமைச்சர் மனோ கணேசனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறுவனத்தில் பெரும்பான்மை மொழி பேசக்கூடியவர்கள் உயர் பதவிகளை வகிப்பதனால் தமிழ் மொழி பற்றிய பூரண அறிவு மற்றும் தெளிவு இல்லாததனால் அதனை எவ்வாறு வேனும் பயன்படுத்தலாம் என நினைத்து செயப்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பலர் தெரிவிக்கின்றனர்.
ஏனென்றால் நான்கு ஐந்து வளவாளர்கள் ஐந்நாறு தொடக்கம் அறுநூறு ஒரே நேரத்தில் கற்பிக்கின்றனராம். இது எந்த வகையில் சாத்தியப்படும்.
தற்போது நுவரெலியா மாவட்டத்தில் இவ்வாறான பயிற்சி வகுப்பொன்று நடைபெற்று வருகின்ற போதிலும் அந்த பயிற்சி வகுப்புக்கு பதுளை பண்டாரவளை கம்பளை ஆகிய பிரதேசங்களிலிருந்து வளவாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
குறித்த வகுப்பிலும் சுமார் 150 மேற்பட்ட அரச அலுவலர்கள் இருப்பதாகவும் இவர்கள் பல்வேறு பிரதேச செயலகங்களுக்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மொழி பயிற்சி வகுப்புக்களை ஒழுங்கு செய்வதற்கும் மொழி தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கும் இணைப்பாளர் ஒருவர் செயலகங்களில் அமர்த்தப்பட்டுள்ள போதிலும் பயிற்சி வகுப்புக்களை மாவட்ட செயலகங்களில் ஒரு சிலர் மாத்திரம் ஒழுங்கு செய்வதாகவும் இதனால் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்க்படுகிறது.
குறித்த நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆசியர்களை தங்களின் கல்வி தகைமைகள் கற்பித்தல் அனுபவங்கள் ஆகியன பரிசீலித்து தரப்படுத்திய போதிலும் அவை எதனையும் பொருப்படுத்தாது தன்னிச்சையாக செயப்படுவதாகவும் பலர் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே இது குறித்து மொழிப்பற்றுள்ள அனைவரும் கவனமெடுக்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -