எச்.எம்.எம்.பர்ஸான்-
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை இன்று (12) செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
தொழுகையையும் குத்பா உரையையும் ஜம்இய்யாவின் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி நடாத்தினார்.
குறித்த பெருநாள் திடல் தொழுகையின் விசேட பார்வையாளர்களாக வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜெயசுந்தர, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
ஜம்இய்யாவின் அழைப்பினை ஏற்று வருகை தந்த பொலிஸ் அதிகாரிகள் அங்கு வருக தந்த பொது மக்களுக்கும், சிறார்களுக்கும் பெருநாள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
குறித்த பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.