110அடி 25அடியாகவும் 8லட்சம்கனஅடி 13ஆயிரமாகவும் குறைவு.
காரைதீவு நிருபர்சகா-வரலாற்றில் முன்னொருபோதுமில்லாதவகையில் இலங்கையின் பிராதான நீhத்தேக்கமாகவுள்ள அம்பாறை சேனநாயக்கசமுத்திரம் கொடிய வரட்சியின்பிடியில் சிக்கியுள்ளது.
அம்பாறை மாவட்ட விவசாயத்திற்கு நீர்ப்பாசனம் மற்றும் குடிநீரை வழங்கிவரும் பிரதான நீர்வழங்கும்மையமான அம்பாறை இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரம் நிலவும் பெரும்வரட்சிகாரணமாக வரலாறு காணாதவகையில் நீர்வற்றிக்காணப்படுகிறது.
மாவட்டத்தில் நிலவும் கொடிய வரட்சியால் 110அடி உயரத்தில் நீர்மட்டம் இருக்கக்கூடியஇச்சமுத்திரத்தின் தற்போதைய நீர்மட்டம் 25.7அடியாகக்குறைந்துள்ளது.
இதுவரலாற்றில் மிகவும் குறைவான நீர்மட்டம் என மாவட்ட நீர்ப்பாசனப்பிரதிப்;பணிப்பாளர் சுகதகமகே தெரிவித்தார்.
அதுமட்டுமல்ல மொத்தமாக 7லட்சத்து 70ஆயிரம் ஏக்கர்அடி நீர் கொள்ளளவு கொண்டது இச்சமுத்திரம். ஆனால் அம்மட்டம் இன்று வெறும் 12ஆயிரத்து 80 ஏக்கர் அடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தநீர் குறைந்த வேளாண்மைச்செய்கைக்காகவும் குடிநீருக்காகவும் மீன்வளர்ப்பிற்காகவும் மாத்திரமே போதுமானதாகும் என மாவட்ட நீர்ப்பாசனப்பிரதிப்;பணிப்பாளர் சுகதகமகே மேலும் தெரிவித்தார்.