கிழக்கு மாகாண சபையை தமிழ்தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுக்கவில்லை- அரியநேந்திரன்


பாறுக் ஷிஹான்-
டந்த மாகாண சபை தேர்தலில் 6500 மேலதிகமாக வாக்குகள் த.தே.கூ கிடைத்திருந்தால் 2ஆசனங்களை மேலதிகமாக பெற்றிருக்கலாம். த.தே.கூட்டமைப்பு ஒரு போதும் கிழக்கு மாகாண சபையை முஸ்லீம் காங்கிரசிற்கு விட்டுக்கொடுக்கவில்லை என முன்னாள் மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில்

தமிழ் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப்புலிகள் மெளனிக்கப்பட்ட 2009ம் ஆண்டிற்கு பின்னரே முழு நேர அரசியலில் ஈடு பட தொடங்கியது.அதற்கு முன் பகுதி நேர அரசியலிலே ஈடுபட்டது.முழு நேர அரசியலில் அப்போது விடுதலைப்புலிகளே மேற்கொண்டனர்.

அப்போது தலைவர் மேதகு பிரபாகரன் ஈழம் கிடைக்கும் என கூறியதை நாம் நம்பித்தான் இருந்தோம் ஆனால் 2009மே 19 இன் பின் அந்த கனவு தவுடுபொடியாகியது.கடந்த மாகாண சபை தேர்தலில் 6500 மேலதிகமாக வாக்குகள் த.தே.கூ கிடைத்திருந்தால் 2ஆசனங்களை மேலதிகமாக பெற்றிருக்கலாம்.

தமிழர்கள் 13 ஆசனங்களையும் முஸ்லீம்கள் 16 இசிங்களவர்கள் 08 ஆசனங்களையும் பெற்று கடந்த கிழக்கு மாகாணசபையில் முஸ்லீம்களே பலமான உறுப்பினர்களை வைத்திருந்து 04 கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார்களே தவிர நாங்கள் கிழக்கு மாகாண சபையை முஸ்லீம் காங்கிரசிஸிற்கு விட்டுக்கொடுக்கவில்லை என தெரிவித்தார்.

இன் நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததோடு மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மாநகர முதல்வர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -