ஓட்டமாவடி அஹமட் இர்சாத்-
JVP இனரின் வழமையான பாணி இதுதான் ,எப்போதும் அவர்களது ஆட்கள் என எல்லோரையும் கூட்டி வந்து பாரிய திரள் ஒன்றை காட்டி விட்டு செல்வர் ,இது வழமையானதுதான் ,இம்முறை சற்று வித்தியாசம்,
ஆனால் வாக்களிப்பின் பின்னர் பெட்டிகள் அவர்களுக்கு ஆதரவாக நிரம்புவதில்லை,காரணம் அவர்களால் அணைத்து தரப்பினரையும் சேர்த்துக் கொண்டு போக முடிவதில்லை ,அது மட்டுமல்ல 1971 மற்றும் 1990 களில் அவர்களது செயற்பாடுகளை மக்கள் மறவாததும் தான்
நேற்று வந்த அந்த மக்கள் திரள் மாத்திரமே அவர்களது வாக்கு வங்கி ,அதற்கு மேல் அவர்களை யாரும் ஆதரிப்பதில்லை ,ஆதரிக்க அவர்களிடம் எதுவும் இல்லை ,சமதர்மம் என்பதை மக்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளவும் தயார் இல்லை ,குறிப்பாக முதலாளித்துவ வர்க்கம் அவர்களை ஏற்றுக் கொள்வதும் இல்லை ,
ஆனால் நேற்றைய தினம் முகநூல்களில் அனுரவுக்கு ஆதரவாக கருத்துக்கள் பரவியதானது என்பது மக்கள் கடந்த ஆட்சிகளை நடத்தியோர் மீதான அதிருப்தியே தவிர வேறில்லை ,புதிய இளைஞர் வாக்காளர்களுக்கு JVP இனரின் கடந்த கால அராஜக வரலாறுகளும் புரியாது ,
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் ,ரனிலோ மஹிந்தவோ அவர்களது குடும்பமோ தவிர வேறு புது முகாம்களை தேடுகின்றனர் ,அவர்களது ஆட்சியில் இப்போதுள்ள வர்கள் சலிப்படைந்து விட்டனர் ,
அதிலும் குறிப்பாக இந்த நல்லாட்சியில் பிரதமர் ரனில் அவர்களின் வகிபாகம் என்பது முஸ்லிம்களால் ஜீரணிக்க முடியாமல் மாறியுள்ளது ,அதே போன்று ஏதோ ஆச்சரியம் ஒன்று நிகழும் என எதிர்பார்த்த கடந்த தேர்தல் வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் ,
இங்கே இந்த நல்லாட்சி என்ற இந்த கூட்டு ஆட்சியின் பிண்ணனியில் கடந்த மூன்று ஆண்டுகளில் மைத்திரி மற்றும் மஹிந்த கூட்டின் புதிய அரசியல் கூட்டு சதிகளை சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை ,அந்தளவு அரசியல் அறிவும் அவர்களிடம் இல்லை ,
ஆட்சியை கொண்டு நடாத்த ஜனாதிபதி மைத்திரி பிரதமர் ரனிலோடு பரந்து பட்ட முறையில் ஒத்துழைக்கவில்லை என்ற விடயம் மக்களிடம் எடுத்துச் செல்லப்படவும் இல்லை ,
அதிகாரப்போட்டியில் பிரதமர் ரனிலால் ஜனாதிபதி மற்றும் மஹிந்த தரப்புக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்ற ஒரு பரவலான குற்றச்சாட்டு இந்த நல்லாட்சியை கொண்டுவந்த மக்களால் சொல்லப்படுகிறது ,
பிரதமர் ரனிலின் ராஜதந்திர அரசியல் , நிதானப்போக்கு,ஜனநாயக பன்பு அவரது ஜென்டில் மேன் அரசியலை புரிந்து கொள்ளும் பக்குவம் சாதாரண பொதுமக்களுக்கு இன்னும் இல்லை ,
அவர் சிறந்த ராஜதந்திரி அனுபவசாலி ,நேர்மையானவர் ஆனால் மக்கள் மனங்களை கவராதவராகவே இதுவரை இருந்து விட்டார் ,ஆனாலும் புதிய ஒரு வேட்பாளராக மாறுபட்ட கொள்கை கொண்ட JV Pயின் அனுர நியமிக்கப்பட்டதும் மக்கள் மனங்களில் ஒரு சந்தோசம் வந்தாலும் அது மறைமுகமாக பலர் குறிப்பிடுவது போல் அந்த பழைய மஹிந்தர் தரப்பு மொட்டு வேட்பாளருக்கே சாதகமாக போகும் வாய்ப்புகள் அதிகம் என்பதை எல்லோரும் அறிய சற்று தாமதமாகலாம் ,
எனினும் இந்த விடயத்தில் சிறுபான்மை கட்சிகள் சற்று நிதானமாக சிந்திப்பதோடு இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பாரிய தெளிவூட்டல்களை செய்ய வேண்டும் ,அதோடு அனுர தரப்பு வெறுமனே வாக்குகளை பிரிக்கவே அன்றி வெற்றி அடைய அல்ல என்ற விடயம் பிரச்சாரப்படுத்தப்பட்டு புதிய பெரும் கட்சி வேட்பாளர் குறிப்பாக UNP யின் சிறப்பான வேட்பாளர் நியமிக்கப்பட்டு மஹிந்த தரப்பு வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு ஜனநாயகம் பாதுகாக்கப்படல் வேண்டும் ,இது விடயத்தில் தான் மக்களிடம் புரிதல்களை ஏற்படுத்த வேண்டும் ,
இந்த நல்லாட்சியில் இந்த நல்லாட்சியை கொண்டு வந்த அவர்களது செயற்பாட்டு இயலாமையே குறிப்பாக பிரதமர் ரனிலின் இயலாமையே இந்த புதிய வேட்பாளரின் அறிமுக ஆரவார ஆதரவுக்கான காரணம் என்பதை உணரல் நன்று ,
இப்போது மக்களதும் சிறுபான்மையினரினதும் விருப்பம் இதுதான் ,யார் போட்டி இட்டாவது கடந்த குடும்ப அராஜக மஹிந்த ஆட்சி மீண்டும் மலரக்கூடாது என்பதே ,
அதை நடைமுறைப்படுத்த யாராவது புதியவர் பலமானவர் வேண்டும் என்பதே ,இதை நடைமுறைப்படுத்த கூடிய எல்லாத் தரப்பு மக்களதும் அபிமானம் பெறக்கூடிய புதிய வேட்பாளரை பிரதான கட்சியான UNP போட்டிக்கு நிறுத்த வேண்டும் என்பதேயாகும் .