சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனத்தின் ஆலோசகர் கேலி நாஸ் மற்றும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் பிரதிநிதிகளுக்கு இடையேயான சந்திப்பு சாய்ந்தமருது ஸீ பிறீஸ் உணவக கூட்ட மண்டபத்தில் 2019.08.13 ஆம் திகதி இடம்பெற்றது.
குறித்த சிநேகபூர்வ சந்திப்பின்போது ஏப்ரல் 21ஆம் திகதியின் பின்னரான நிலவரங்கள் அதன்பின்னர் மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் குறிப்பாக முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள இறுக்கமான நிலை, மற்றும் குறித்த தாக்குதலின் பின்னர் ஊடகங்கள் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டன போன்ற விடயங்களும் எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களை பயிற்றுவிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த சந்திப்பின்போது USAID இன் ஐவன் றசியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கை துதரகத்தின் சார்பில் நௌசாட் ஜப்பார் ஆகியோரும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்.ஏ.பஹுறுடீன் தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஊடகவியலாளர்களுக்கு இடையேயான சந்திப்புக்கு முன்னராக அம்பாறைமாவட்ட புத்திஜீவிகளுக்கு இடையேயான சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -