ஹஸ்பர் ஏ ஹலீம்,எப்.முபாரக்-
கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2019 ஆண்டுக்கான கிழக்கு மாகாணத் தமிழ் இலக்கிய விழாவில் கௌரவிக்கப்படும் பல்துறைக் கலைஞர்களில் சிரேஷ்ட பிரஜைகள் 10 பேர்களுக்கு வித்தகர் விருதுகளும் வழங்கப் பட்டுள்ளன.
இந்த நிகழ்வு நேற்று (23) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி, முத்துபண்டா தலைமையில் இடம்பெற்றது.
இதில் இலக்கியத்துறையில் திரு , அருலாம்பலம் - குகராஜா - சம்பூர்,
இலக்கியத் துறை - திரு, கனகசபை - தேவகடாட்சம் - பிறப்பிடம், மல்லிகைத் தீவு வசிப்பிடம் , உவர்மலை
ஆக்க இலக்கியத்துறை திரு, வேலுப்பிள்ளை, புவனேஸ்வரன் , ஆரையம்பதி மட்டக்களப்பு,
நாட்டார் கலைத்துறை திரு, குமரசாமி -சன்முகம் , வந்தாறுமுலை , மட்டக்களப்பு,
நாட்டார் கலைத்துறை - ஜனாப், சேகு அப்துல் காதர்- ஆதம்பாவா, சாய்ந்தமருது,
நாடகத்துறை - ஜனாப் ,இஸ்மா லெப்பை-ஆதம் லெப்பை, பாலமுனை ,
நாடகத்துறை திரு , நல்லையா - கந்தசாமி, ஆரையம்பதி, மட்டக்களப்பு,
இசைத்துறை , ஜனாப், உதுமான் லெப்பை- முகம்மது நஜிமுதீன், கல்முனை,
நுன்கலைத்துறை ,திரு ,கதிரமலை- நவமணி, கல்முனை ,
ஊடகத்துறை ,அப்துல் முத்தலிப் - அப்துல் பரீத் , கிண்ணியா திருகோணமலை,
இவர்களுக்கு பொன்னாடை போர்த்தி , நினைவுச் சின்னங்களும் வழங்கி , பணப் பரிசுகளும் (தலா 25, ஆயிரம் காசோலைகள் ) வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.