1300 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு குடி நீர் வசதி..



னுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் மேற்கொண்ட நிதியொதுக்கீட்டின் கீழ் தலாவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கட்டியாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொதுக்கிணறு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் உத்தியோக பூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டது.

கட்டியாவ யாய 7,8,9 ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 1300 இற்கும் அதிகமான குடும்பங்கள் குறித்த கிணற்றின் மூலம் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கான நீரினை பெற்றுக்கொள்ள முடியுமாக காணப்படுகின்றது.

கடந்த இரண்டு மாதங்களுக்குள் இதுபோன்ற மேலும் இரண்டு கிணறுகள் மதவாச்சி, மொரகொட ஆகிய பிரதேசங்களில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -