அரச நிறுவனங்களில் 180 நாட்கள் பணி புரிந்தோருக்கு நிரந்தர நியமனம்

ஐ. ஏ. காதிர் கான்-

ரச நிறுவனங்களில் 180 நாட்கள் பணி புரிந்த தற்காலிக, நாள் சம்பள, ஒப்பந்த, நிவாரண மற்றும் பதில் நியமன ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இது தொடர்பிலான சுற்று நிருபத்தை அமுல்படுத்துவது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர, அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சர் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க நிர்வாக சுற்று நிருபம் 25/2014 மற்றும் 25/2014/01 ஆகியன வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில், அந்தச் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களைப் பூர்த்தி செய்ய முடியாமல் போனதன் காரணமாக, நிரந்தர நியமனங்களைப் பெற்றுக் கொள்ளமுடியாத ஊழியர்களுக்கு, குறித்த நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்று நிருபம் வெளியிடப்பட்ட பின்னர், சேவை மற்றும் தேவையின் அடிப்படையில் அரச நிறுவனங்களில் ஆரம்பத் தரங்களுக்கு உட்பட்ட பதவிகளுக்கு தற்காலிக, நாள் சம்பளம், ஒப்பந்த, நிவாரண, பதில் நியமன மற்றும் நிவாரண அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, இணைத்துக்கொள்ளப்பட்டு 2019.09.01 தினத்தன்று,

180 நாட்களுக்கு மேலாக சேவையாற்றியுள்ள ஊழியர்கள், உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் அவர்களை நிரந்தரமாக்கி, ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -