தாமரைக் கோபுர பணிக்காக கொடுத்த 200 கோடி மாயம்.
தென் ஆசியாவின் மிக உயரமானதும் இலங்கையின் பெருமையை வெளிப்படுத்துவதுமான தாமரைக் கோபுரம் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரை நிகழ்த்தியபோது.
2012ஆம் ஆண்டில் இக்கட்டிட நிருமான பணிகளுக்காக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 200கோடி ரூபா மாயமகியுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை அவர் தெரிவித்தார். 104.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சீன அரசும் ஏனைய தொகையை இலங்கையின் தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு வழங்கியிருக்கின்றது.
தென் ஆசியாவின் மிக உயர்ந்த இந்தக் கட்டிடத்தை அரச நிறுவனமாக மாற்றி அதன் சேவையை மக்களுக்கு வழங்க விருப்பதாகவும் இதனைக் கட்டிய செலவான 300 கோடி ரூபா இலங்கைக்கு கடனாகும் இதனை இலங்கை அரசு திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சுமார் 356 மீற்றர் உயருமுடைய இக்கட்டிடம் 10 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ளதுடன் 50க்கும் மேற்பட்ட வானொலிஇ 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் 20க்கும் மேற்பட்ட தொலைத் தொடர்புகள் நிலையங்களும் 6வது மற்றும் 7வது மாடிகளில் அமைக்கப்படவுள்ளது.
இக்கோபுரத்தின் திறப்பு விழாவை கண்டு களிக்க பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர். உற்ளே இடவசதி இல்லை என்ற காரணத்தினால் பலர் வெளியில் நின்றே பார்த்ததையும் அவதானிக்க முடிகின்றது.