மலைநாட்டு புதிய கிராமங்கள்இ உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தனிவீடுகளுக்கான 483 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று அட்டன் டி.கே.டபுள்யூ. கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்ட அமைச்சர்கள் பி. திகாம்பரம், வீ. இராதாகிருஸ்ணன் ஆகியோர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப் பட்டனர்.
அத்துடன் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம். உதயகுமார், எஸ். ஸ்ரீதரன், எம். ராம், நகர சபை உறுப்பினர் டாக்டர் ஏ. நந்தகுமார், பிரதேச சபை உறுப்பினர்கள் பா. சிவநேசன், வீ. சிவானந்தன், மலையக மக்கள் முன்னணி செயலாளர் நாயகம் ஏ. லோறன்ஸ், உபதலைவர் ஆர். இராஜமாணிக்கம், தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன் மற்றும் அமைச்சரின் பொதுசனத் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார், காணி அமைச்சின் அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழ்ங்கி வைத்தனர்.