காரைதீவு நிருபர்சகா-
உலகத்தமிழர் பூப்பந்தாட்டப்பேரவையின் ஏழாவது உலக பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி சுவிற்சலாந்தில்நடைபெறவிருக்கிறது. அதற்காக இலங்கையிலிருந்தும்வீரர்களை எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு உலகத்தமிழர் பூப்பந்தாட்டப்பேரவையின் இலங்கைக்கான இணைப்பாளரும் வடமாகாண பூப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளருமான தவராசா கமலன் கல்முனையில் தெரிவித்தார்.
மேற்படி பேரவையின் பூப்பந்தாட்டசுற்றுப்போட்டி இம்முறை முதற்றடவையாக அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றது. அதன் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் கல்முனையில் நடைபெற்றபோது பேசுகையில் அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இறுதிநாள்இறுதிச்சுற்றுப்போட்டியும் பரிசளிப்புவிழாவும்கல்முனை வைஎவ்சிஉள்ளகஅரங்கில் நேற்று(15) மாலை பேரவையின்அம்பாறைமாவட்ட இணைப்பாளரும்விளையாட்டு உத்தியோகத்தருமான பத்மநாதன் வசந்த் தலைமையில்நடைபெற்றது.
இறுதிநாள்விழாவில் சிறப்பதிதிகளாக அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் அமீர்அலி உதவிக்கல்விப்பணிப்பாளர்வி.ரி.சகாதேவராஜா ஆகியோர்கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி போட்டி சம்மாந்துறை காரைதீவு கல்முனை ஆகிய பிரதேசங்களிலுள்ள உள்ளகஅரங்கில்நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதிவிழாவில் இணைப்பாளர் கமலன் மேலும்பேசுகையில்:
இலங்கையின் எட்டு மாவட்டங்களில் தமிழ்பேசும் வீரர்களை இணைத்து வருடாந்தம் இப்பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியினை நடாத்திவருகிறோம்.
உலகத்தமிழர் பூப்பந்தாட்டப்பேரவையின்ஸ்தாபகர் கந்தையா சிங்கம் உலகளாவியரீதியில் இவ்விளையாட்டைபிரபலப்படுத்தி குறிப்பாக தமிழ்பேசும்வீரர்களை தேசிய சர்வதேசரீதீயில் பிரகாசிக்கச்செய்யவேண்டும் என்றஉன்னத நோக்கில் செயற்பட்டுவருகிறார்.
இதற்கு ஹோலண்நாடு அனுசரணையாக விளங்குகிறது. தற்போது சிறிபாலா தலைவராகவும்ரமேஸ் செயலாளராகவும் சிறப்பாக இயங்கிவருகிறார்கள்.
இம்முறை முதற்றடவையாக அம்பாறை மாவட்டத்தில் தமிழ்பேசும் வீரர்களை இணைத்து இணைப்பாளர் வசந்தின் ஒத்துழைப்புடன்நடாத்துகிறோம்.
அடுத்ததடவை இதைவிட விரிவாக நடாத்த ஒத்துழைப்பை நாடுகிறோம். காரைதீவில் நிருமாணிக்கப்பட்டுவரும் உள்ளகவிளையாட்டரங்கிற்கு மாவட்ட விளையாட்டு அதிகாரி உதவவேண்டும்.
இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போட்டி எதிர்வரும்29ஆம்30ஆம்திகதிகளில் நடாத்தப்படவிருக்கிறது. என்றார்.
விழாவில் அம்பாறை மாவட்ட பூப்பந்தாட்ட பயிற்றுனர் எ.எல்.எம்.றசீன் நிலஅளவைஅத்தியட்சகர் க.தட்சணாமூர்த்தி காரைதீவு விளையாட்டுக்கழகத்தலைவர் எல்.சுரேஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இறுதியில் வெற்றபெற்ற வீரவீராங்கனைகளுக்கு வெற்றிக்கேடயங்கள் அதிதிகளால் வழங்கப்பட்டன.
விளையாட்டு உத்தியோகத்தர் எல்.சுலக்சன் நன்றியுரையாற்றினார்.