நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் மண் சரிவு..


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

நா
ட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கணத்த மழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.

அம்பகமுவ பிரதேச செயலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா பெயர்லோன் தோட்டத்தில் சின்ன சூரியகந்த பிரிவு தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 36 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் தோட்டத்தில் உள்ள சிறுவர் பாராமறிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தங்க வைக்கபட்டவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மற்றும் கிராம சேவகர் ஊடாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகிய இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்பட்டுள்ளன.

இதே வேலை தொடர்ச்சியாக நீரேந்தும் பிரதேசங்களுக்கு மழை பெய்து வருவதனால் காசல் ரி மவுசாகலை, கெனியோன், லக்ஸபான, நவலக்ஸபான ,விமலசுரேந்திர மேல் கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.

காசல் ரி நீர்தேக்கத்தின் நீரேந்தும் பகுதியில் அதிகமான மழை வீழ்ச்சி கிடைத்துள்ளமையினால் வான் பாய்வதற்கு இன்னும் நான்கு அடி மாத்திரம் இருப்பதாகவும் இதனால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக மலையகத்தின் பல பகுதிகளுக்கு மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.
மழை காரணமாக ஹட்டன் கொழும்பு ஹட்டன் நுவரெலியா தியகல வழியாக மஸகெலியா ஆகிய வீதிகளில் பல இடங்களில் மண் சரிவு அபாயம் நிலவுவதனால் இவ்வீதிகளை பயன்படுத்து சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்'டுக்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -