காரைதீவு ஆசிரியை சரண்யாவுக்கு புதுக்கவிதைக்கான விருது!


காரைதீவு ஆசிரியை சரண்யாவுக்கு புதுக்கவிதைக்கான விருது!
நாளை கிழக்கு தமிழ் இலக்கியவிழாவில் விருது பெறுகிறார்!
காரைதீவு நிருபர் சகா-

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் கலாசார அலுவல்கள் திணைக்களம் கிழக்குமாகாண அரச உத்தியோகத்தர்களுக்கிடையே நாடாத்திய இவ்வருடத்துக்கான புதுக்கவிதைப்போட்டியில் காரைதீவைச்சேர்ந்த ஆசிரியை திருமதி சரண்யா மதிராஜ் முதலிடம் பெற்றுள்ளார்.
சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் கணிதபாட
ஆசிரியையாக கடமையாற்றும் திருமதி சரண்யா முதல்தடவையாக இத்தகைய விருதைப்பெறுகிறார்.
கிழக்குமாகாண தமிழ் இலக்கிய விழா நாளை (22) ஞாயிற்றுக்கிழமை
மட்டக்களப்பில் நடைபெறுகின்றவேளை இவருக்கு முதற்பரிசும் விருதும்
வழங்கப்படவிருப்பதாக கலாசாரப்பணிப்பளார் சரவணமுத்து நவநீதன் கடிதம்மூலம் அறிவித்திருக்கிறார்.
இவருக்கான விருது நாளை 22 ம் திகதி மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வழங்கப்படவுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -